சிவனார் வேம்பு சூரணம்

சிவனார் வேம்பு, சங்கம் வேர் பட்டை, பூவரசம் பட்டை இவை வகைக்கு 5 பலம்
எட்டி வேர் பட்டை 50 பலம், வெள்ளருகு சமூலம் 50 பலம்


இவைகளை உலர்த்தி இடித்து சூரணித்து வஸ்திரகாயம் செய்து சமன் நாட்டு சர்கரை சேர்த்து கலந்து வைத்து கொண்டு திரிகடி பிரமாணம் காலை மாலை சாப்பிட்டால் பாம்பு, பூரான், எலி, வண்டு தேள், செய்யான், பூனை, ஓணான் முதலிய கடி விஷம் போகும். மேகப்படை, ஊரல், குஷ்டம் மற்றும் அனைத்து தோல் நோய்களும் கிரந்தி முதலியன குணமாகும்.

புளி, கடுகு, எள்ளெண்ணெய், மீன் கருவாடு மொச்சை, கொள்ளு, பூசணிக்காய், பால், தயிர் துவரை, பாசிபயறு இவை ஆகாது.

Leave a Comment

Shopping Cart
Scroll to Top